என்ன நடந்தாலும் அதிபர் பதவியை விட்டு விலகப் போவதில்லை!

Default Image

தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஸூமா (Jacob Zuma) கடும் ஊழல் புகாரில் சிக்கியுள்ள நிலையில்   அதிபர் பதவியில் இருந்து விலகப் போவதில்லை என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்த ஸூமா மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக சிரில் ரமாபோசா ((Cyril Ramaphosa)) தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் அதிபர் பதவியிலும் சிரில் ரமாபோசாவை அமர வைக்க கட்சியின் மூத்த தலைவர்கள் விரும்புகின்றனர். ஸூமாவின் ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் பலவீனமடைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அவரால் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சிக்கு மக்களிடையே செல்வாக்குக் குறைந்து வருகிறது.

இது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். அந்தக் கூட்டத்தில் ஸூமா, தான் பதவி விலகப் போவதில்லை என திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டார். அடுத்த ஆண்டு தேர்தல் வரும் நிலையில், ஸூமாவின் இந்தப் பிடிவாதம் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியினரைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்