சூரரைப்போற்று வருமானத்தில் ரூ.5 கோடி கொரோனா பணியாளர்களுக்கு வழங்கப்படும் – நடிகர் சூர்யா
சூர்யாவின் சூரரைப்போற்று ஓடிடியில் ரிலீஸ் செய்வதை அடுத்து, அதன் வெளியீட்டு தொகையில் ஐந்து கோடி ரூபாயை முன்கள பணியாளர்களுக்கு வழங்கவுள்ளதாக கூறியுள்ளார்
நடிகர் சூர்யா தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் சூரரைப்போற்று. இப்படத்தை சுதா கோங்குரா இயக்குகிறார். மேலும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் சம்பத் ராஜ், கருணாஸ், ஜாக்கி ஷ்ரூஃப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. ரிலீஸ்க்கு தயாராக இருந்த படம் கொரோனா தொற்று காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்த படத்திற்கு யூ சான்றிதழ் வழங்கியது குறிப்பிடத்தக்கது.இந்த படத்திலுள்ள அனைத்து பாடல்களும் ரசிகர்களின் பேவரட்டாக மாறியுள்ளது. தற்போது இந்த படத்தை அமேசான் பிரேமில் வெளியிடவுள்ளதாகவும், தயாரிப்பாளராக அனைவரின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார். மேலும் சூரரைப்போற்று வெளியீட்டு தொகையில் வரும் பணத்தில் ஐந்து கோடி ரூபாயை முன்கள பணியாளர்களுக்கு வழங்கவுள்ளதாக கூறியுள்ளார். அதாவது பொது மக்களுக்கும், திரையுலகை சார்ந்தவர்களுக்கும் தன்னலம் பாராமல் கொரோனா யுத்த களத்தில் முன் நின்று பணியாற்றியவர்களுக்கு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Vinayagar Chathurthi wishes to all!#SooraraiPottruOnPrime @PrimeVideoIN pic.twitter.com/ZdYSF52ye2
— Suriya Sivakumar (@Suriya_offl) August 22, 2020