ரூபாய் 2,84,442,00,00,000 “மத்திய அரசுக்கு வருவாய்” உளறும் மத்திய அமைசர். ப.சிதம்பரம் கண்டனம்..!!
புதுடெல்லி, செப். 22 – மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தான் சம்பந் தப்பட்ட பாதுகாப்புத் துறையையே ஒழுங்காக கவனிப்பதில்லை. ஆனாலும், நிதித்துறை, மனிதவள மேம்பாட்டுத் துறை, சட்டத்துறை என ஒட்டுமொத்த மத்திய அரசுக்கும் இவரே பொறுப்பானவர் என்ற நினைப்பில் உளறிக் கொட்டுவார். அப்படித்தான், பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பான விஷயத்தில் நுழைந்து, மத்திய முன்னாள் நிதிய மைச்சர் ப. சிதம்பரத் திடம் மூக்குடைப்பட்டுள்ளார். பெட்ரோல் – டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், இதன் மீதான வரிகளை மத்தியஅரசு குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வரு கின்றனர்.
இந்நிலையில் தான், நிதியமைச்சர் பதிலளிக்க வேண்டிய விஷயத்திற்குள், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஊடே புகுந்து பதிலளித்தார். எண்ணெய் பொருடகள் மீது மாநிலங்கள் தான் அதிக வரி விதிக் கின்றன; அதனால் அவர்கள்தான் குறைக்க வேண்டும்; மத்திய அரசோ இவற்றில் பாதி வரியைத் தான் விதிக்கிறது என்று புதிய விளக்கம் ஒன்றை அவர் அளித்தார்.
இதுதொடர்பாக தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள ப. சிதம்பரம், எரி பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரிகள் மூலம் கடந்த 2017 -18 ஆம் ஆண்டில் மத்திய அரசு ரூ. 2 லட்சத்து 84 ஆயிரத்து 442 கோடி யைப் பெற்றுள்ளது. அதேசமயம் மாநில அரசுகள் ரூ. 2 லட்சத்து 8 ஆயிரத்து 893 கோடி மட்டுமே வரி வசூல் செய்துள்ளன. இதில் எது அதிகம் என்று நீங்களே கூறுங்கள் என்று குறிப்பிட்டு, நிர்மலா சீத்தாராமனின் உளறலை அம்பலப்படுத் தியுள்ளார். ஒரு துறைக்கு மற்ற வர்களும் பதிலளிக்க லாம். ஆனால், சரியாக பதிலளிக்க வேண்டும் என்றும், நிர்மலா சீத்தா ராமனுக்கு கணக்குகூட தெரியவில்லையே என்பதாகவும் ப.சிதம்பரம் பதிவு அமைந்துள்ளது.
DINASUVADU