கிருஸ்துவ மத போதகர் பால் தினகரனுக்கு வருமானவரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
இயேசு அழைக்கிறார் நிறுவனத்தின் தலைவரான பால் தினகரனுக்கு சொந்தமான சென்னை பாரிமுனை, அடையாறு, கோவை காருண்யா பல்கலை உள்பட தமிழகத்தில் உள்ள 28 இடங்களில் கடந்த மூன்று நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
இந்த வருமானவரித்துறை சோதனையில், கோவையில் உள்ள காருண்யா பலக்லைக்கழகம் மற்றும் கல்வி நிறுவனங்களில் ஆவணங்கள் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், கணக்கில் வராத சொத்துக்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த மூன்று நாட்கள் நடைபெற்ற சோதனையில், 5 கிலோ தங்கம், ரூ.120 கோடி கணக்கில் வராத முதலீடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கிருஸ்துவ மத போதகர் பால் தினகரனுக்கு வருமானவரித்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பால் தினகரன் அடுத்த வாரம் சென்னையில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கேள்வி பதில் நேரத்தில் சீனாவில் 14 வயதுக்கு உட்பட்டோரை பாதிக்கும்…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர்…
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…