பொங்கல் பரிசாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ .1000 வழங்கப்படும்..!ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
பொங்கல் பரிசாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ .1000 வழங்கப்படும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.
ஆண்டின் முதல் பேரவைக் கூட்டத்தொடர்:
ஆண்டின் முதல் பேரவைக் கூட்டத்தொடர் இன்று (ஜனவரி 2 ஆம் தேதி) காலை 10 மணிக்கு கூட உள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் தனது அறிக்கையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது:
தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை:
அனைவருக்கும் காலை வணக்கம், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என தமிழில் பேசி சட்டப்பேரவையில் உரையை தொடங்கினார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித். அவர் உரையில்,எளிமையான வாழ்க்கை வாழுங்கள், இதுவே எனது செய்தி.கஜா புயல் மறுசீரமைப்பு பணிக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் . திருவாரூர் தவிர மற்ற பகுதிகளில் பொங்கல் பரிசாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ 1000 வழங்கப்படும்.ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.