இந்த குழுவினரின் நாக்கை அறுப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு! பகிரங்க அறிவிப்பை வெளியிட்ட கர்னி சேனா அமைப்பு!
தாண்டவ் என்ற வெப் தொடரில் இந்துமத கடவுளை அவமதித்ததாக சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால் கர்னி சேனா என்ற அமைப்பு பகிரங்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தாண்டவ் என்ற வெப் தொடரை இயக்குனர் அலி அப்பாஸ் ஜாபர் இயக்கியுள்ளார். இந்த வெப்சீரிஸை பர்கான் அக்தர் தயாரித்துள்ளார். இந்த தொடர் அமேசான் பிரேமில் வெளியாகியுள்ளது. இந்த தொடரில் இந்துமத கடவுளை அவமதித்ததாக சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளது.
இந்த வெப் தொடரில், நடிகர் சயீப் அலி, இயக்குனர் அலி அப்பாஸ் ஜாபர் ஆகியோர் மீது இந்து மதக் கடவுளை அவமதித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, மகாராஷ்டிராவை சேர்ந்த கர்னி சேனா என்ற அமைப்பின் தலைவர் கூறுகையில் தாண்டவ் குழுவினரின் நாக்கை அறுப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என பகிரங்கமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.