830கோடி வர்த்தகத்தை கடந்த RRR…பிரம்மாண்ட படைப்பாக வருகிறது..!
பிரம்மாண்ட பாகுபலி வெற்றியை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடையாத நிலையில் படம் 830 கோடி ரூபாயைக் கடந்து வர்த்தகம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரமிக்க வைக்கக்கூடிய இயக்குநர்களில் இயக்குநர் ராஜமௌலியும் ஒருவர் இவருடைய படைப்பு மிகவும் வித்தியாமாகவும் விரும்பும் வகையிலும் இருக்கும்.பாகுபலியை அடுத்து ராஜமௌலியின் இயக்கத்தில் உருவாகிவரும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.படத்தில் தெங்லுங்கு முக்கிய பிரபலங்கலான ராம்சரன்,ஜூனியர் NTR மற்றும் அஜேஷ் தேவ்கன் உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் படப்பிடிப்பு அசுர வேகத்தில் நடந்து வரும் நிலையில் படம் வார்த்தக ரீதியாக இப்பொழுதே சாதனை செய்துள்ளது.அவ்வாறு படம் 830 கோடி ரூபாயைக் கடந்து வர்த்தகம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.. திரைப்படம் தற்போது வரை RRR என அழைக்கப்பட்டு வருகிறது தமிழ், தெலுங்கு,ஹிந்தி ஆகிய மொழிகளில் பெரும் தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.