ஆர்ஆர்ஆர் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு..!
ஆர்ஆர்ஆர் படத்தின் மேக்கிங் வீடியோவை இயக்குனர் ராஜமௌலி தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பாகுபலி திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலி ‘ஆர்ஆர்ஆர்'(ரத்தம், ரணம், ரௌத்திரம்) என்ற திரைப்படத்தை தற்போது இயக்கி வருகிறார். பான்-இந்தியா படமாக உருவாகும் இந்த திரைப்படத்தில் நடிகர் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ஸ்ரேயா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் பல ஹாலிவுட் பிரபலங்களும் நடிப்பதாக கூறப்படுகிறது.
மேலும், ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை படத்திலிருந்து வெளியான போஸ்டர்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. அந்த வகையில், தற்போது ஆர்ஆர்ஆர் படத்தின் மேக்கிங் வீடியோவை இயக்குனர் ராஜமௌலி தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
A glimpse into the making of @RRRMovie… Hope you all love it.:)https://t.co/afM8x6aIOP#RoarOfRRR #RRRMovie @tarak9999 @AlwaysRamCharan @ajaydevgn @aliaa08 @OliviaMorris891 @DVVMovies @PenMovies @LycaProductions
— rajamouli ss (@ssrajamouli) July 15, 2021