வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் ரௌடி பேபி சாய் பல்லவி.?

Default Image

வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் நடிகை சாய்பல்லவி நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. 

தமிழில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் வேதாளம். இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹானும், அஜித்துக்கு தங்கையாக நடிகை லெட்சுமி மேனனும் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்ப்பை பெற்று இந்த திரைப்படம் நல்ல வசூல் சாதனை செய்தது.

இந்த படம் தமிழில் வெற்றியடைந்ததை தொடர்ந்து, தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளது. இந்த தெலுங்கு ரீமேக்கில் அஜித் நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் சிரஞ்சீவி நடிக்கிறார். படத்தை அஜித்தின் பில்லா படத்தின் ரீமேக்கை இயக்கிய மெஹர் ரமேஷ் இயக்குவதாக கூறப்படுகிறது. இந்த தெலுங்கு ரீ மேக்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில், தற்போது இந்த தெலுங்கு ரீமேக்கில் சிராஜிவிக்கு தங்கையாக  லட்சுமி மேனன் நடித்த கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து தற்போது கிடைத்த தகவலின் படி, இதில் சிராஜிவிக்கு தங்கையாக பிரபல நடிகையான சாய் பல்லவி நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்