ருமேனியா: மருத்துவமனை தீ விபத்தில் 9 பேர் உயிரிழப்பு..!
ருமேனியா நாட்டில் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
ருமேனியாவின் கான்ஸ்டன்டா நகரில் உள்ள கொரோனா தொற்று சிகிச்சை நடைபெறும் மருத்துவமனையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் 113 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
மேலும், 10 பேர் தீவிர சிகிச்சை மையத்தில் இருந்துள்ளனர். இந்த நிலையில் தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், அந்த இடத்தில் இருந்த மற்ற நோயாளிகளை பத்திரமாக பாதுகாப்பான இடத்திற்கு மாற்றியுள்ளனர்.