5ஆண்டுகள் கழித்து மெகா ஹிட் படத்திலுடன் ரீ என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
நடிகை ரோஜா, அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் 90ஸில் ஏராளமான படங்களில் நடித்து பிரபலமானவர் ரோஜா. இவர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோகளுடன் நடித்துள்ளார்.இயக்குனர் ஆர். கே. செல்வமணியின் மனைவியான இவர் ஆந்திரா மாநிலத்தில் உள்ள நகரி என்ற தொகுதியின் எம். எல். ஏ மற்றும் ஓய்.எஸ்.ஆர் என்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆவர்.இவர் கடைசியாக 2015ல் கில்லாடி, புலன் விசாரணை 2 உள்ளிட்ட ஒரு சில படங்களிலே நடித்தார். அதனையடுத்து இவர் சினிமாவிலிருந்து விலகி அரசியல் பக்கம் கவனம் செலுத்த தொடங்கி விட்டார். தற்போது இவர் 5 ஆண்டுகள் கழித்து சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார். ஆம் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்தில் ஒரு நெகட்டிவ் கேரக்டரில் ரோஜா அவர்கள் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
கடத்தல் சம்பந்தப்பட்ட கதையம்சத்தை கொண்ட புஷ்பா படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. மேலும் இந்த படத்தில் ரஷ்மிகா மந்தனா அல்லுக்கு ஜோடியாக நடிக்கிறார்.மேலும் இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை சுகுமார் இயக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரும் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 5 வருடங்கள் கழித்து ரிஎன்டரி கொடுக்கும் ரோஜாவினை மீண்டும் திரையில் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)