தோனியை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் உள்ள ரோஹித் சர்மா
உலகக்கோப்பையில் 22-வது லீக் போட்டியில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் மோதியது. போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 337 ரன்கள் சேர்த்தனர். மழைகாரணமாக 40 ஓவராக குறைக்கப்பட்டது. பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 40 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 212 ரன்கள் எடுத்து 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது.
இந்நிலையில் நேற்று முன் தினம் நடந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 113 பந்தில் 140 ரன்கள் குவித்தார்.அதில் 3 சிக்ஸர், 14 பவுண்டரி விளாசினார்.இந்த போட்டியில் 3 சிக்ஸர் அடித்ததன் மூலம் இந்திய வீரர்களில் அதிக சிக்ஸர் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை புரிந்தார்.
அதற்கு முன் மகேந்திர சிங் தோனியும், ரோஹித் சர்மாவும் 355 சிக்ஸர் எடுத்து முதலிடத்தில் இருந்தனர். தற்போது, ரோஹித் சர்மா 358 சிக்ஸர் எடுத்து தோனியை பின்னுக்கு தள்ளி உள்ளார்.