ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் அதிக ரன்கள் அடித்த வீரர்களில் ரோஹித் சர்மா இடம்பிடித்தார் !
நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி , பாகிஸ்தான் அணி மோதியது. இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 336 ரன்கள் குவித்தது.
மழை காரணமாக 40 ஓவராக குறைக்கப்பட்டு 302 இலக்காக வைத்தனர்.பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 40 ஓவர் முடிவில் 212 ரன்கள் மட்டுமே எடுத்து 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைத்தது.
இந்நிலையில் இதுவரை ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடந்த ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர்களில் ரோஹித் சர்மா இடம் பெற்றார். நேற்று நடந்த போட்டியில் ரோஹித் சர்மா 140 ரன்கள் குவித்து மூன்றாம் இடத்தில் உள்ளார்.
189* – Viv Richards vs England, 1984
142* – Chris Athey vs New Zealand, 1986
140 – Rohit Sharma vs Pakistan, 2019