டெண்டுல்கர்-சித்து உலகக்கோப்பை சாதனையை முறியடித்த ரோஹித் -கே.எல்.ராகுல் !
நேற்று நடந்த போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதின. இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடை பெற்றது.
முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 336 ரன்கள் குவித்தது. மழை காரணமாக 40 ஓவராக குறைக்கப்பட்டு 302 இலக்காக வைத்தனர்.பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 40 ஓவர் முடிவில் 212ரன்கள் எடுத்து 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைத்தது.
இந்நிலையில் பெங்களூருவில் 1996-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் நவ்ஜோத் சித்து ஆகியோர் களமிறங்கி தொடக்க விக்கெட்டை 90 ரன்னில் இழந்தனர்.
அதன் பிறகு நடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் அதுவே அதிகபட்ச ரன்னாக இருந்தது. ஆனால் நேற்றைய போட்டியில் தொடக்க வீரர்களான ரோஹித் -கே.எல்.ராகுல் களமிறங்கினர்.
ஆட்டம் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடி அணியின் ரன்களை உயர்த்தினார். இப்போட்டியில் தொடக்க விக்கெட்டை 136 ரன்னில் இழந்தனர்.இதன் மூலம் சச்சின் மற்றும் நவ்ஜோத் சித்து சாதனையை முறியடித்தனர்.