விராட் கோலியை விட ரோஹித் தான் சிறந்த கேப்டன்……கவுதம் கம்பீர்..!
13 வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது. மேலும், போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் அடித்தது. அதன்பிறகு 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் அதிரடியாக விளையாடி 18.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரில் 5 முறை கோப்பையை வென்ற ஒரே அணி என்ற சாதனையும் மும்பை படைத்தது. இந்த நிலையில் இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் கூறியதாவது, மும்பை அணி 5 வது முறை கோப்பையை வென்றது மகிழ்ச்சி. இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா இருக்க வேண்டும் ரோஹித் சர்மா இல்லாவிட்டால் இந்தியாவிற்கு பெரும் இழப்பு.
கேப்டன் தோனியை எதற்காக சிறந்த கேப்டன் என்கிறோம் 2 முறை உலக கோப்பை 3 முறை ஐபிஎல் கோப்பை வென்றதால் அவரை மிகவும் சிறந்த கேப்டன் என்று கூறுகிறோம். அதேபோல்தான் ரோகித் சர்மா ஐபிஎல் தொடர்களில் 5 முறை கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். விராட் கோலியை விட ரோஹித் சர்மா தான் சிறந்த கேப்டன் மேலும் டி20 அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக இருப்பது மிகவும் சிறப்பானது.
விராட் கோலியை விட ரோஹித் சர்மா சிறப்பாக அணியை வழிநடத்துகிறார். இந்திய ஒருநாள் டி20 அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவை தான் நியமிக்க வேண்டும் என்றும் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.