காங்கிரஸ் கட்சியின் சமூகவலைதள பிரிவில் இருந்து திவ்யா திடீர் நீக்கம்
காங்கிரஸ் கட்சியின் சமூகவலைதள பிரிவு தலைவியாக இருந்த திவ்யாவை நீக்கப்பட்டுள்ளார்.
தமிழ் மற்றும் கர்நாடக திரைத்துறையின் முன்னணி நடிகை ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா ஆவார்.இதன் பின் இவர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.காங்கிரஸ் கட்சியில் இணைந்த ரம்யா கர்நாடகா மாநிலம் மாண்டியா தொகுதியிலிருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். பிறகு 2014ல் தோல்வியடைந்தார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சமூகவலைதள பிரிவு தலைவியாக திவ்யா நியமிக்கப்பட்டார். அவர் சமூகவலைத்தளங்களில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அடிக்கடி கருத்துக்களை தெரிவித்து சர்ச்சையில் சிக்கி வந்தவர்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் சமூகவலைதள பிரிவு தலைவியாக இருந்த திவ்யாவை நீக்கிவிட்டு ரோகன் குப்தாவை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இந்த அறிவிப்பை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணு கோபால் வெளியிட்டுள்ளார்.