காலம் ஒரு துரோகி, படுபாவி, பிசினாரி! ‘தரமணி’ வசந்த் ரவியின் மிரட்டலான நடிப்பில் ரத்தம் தெறிக்க வெளியான ராக்கி ட்ரெய்லர்!
ராம் இயக்கத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற தரமணி படத்தில் அறிமுகமாகி முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர் வசந்த் ரவி. இவர் அடுத்ததாக தற்போது ராக்கி எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் என்பவர் இயக்கி உள்ளார். இந்த படத்தில் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தர்புகா சிவா இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. டிவிட்டரில் ராக்கி டிரைலர் ட்ரெண்டிங்கில் உள்ளது.
இதில் ஆக்ரோஷமான வன்முறை காட்சிகள் சன்டை காட்சிகள் என பார்ப்பதற்கே பயங்கரமாக இருக்கிறது. மேலும் ட்ரெய்லரில் வசந்த் ரவியும், பாரதிராஜாவும் சிறப்பாக நடித்து உள்ளது தெரிகிறது.