கேஜிஎஃப் 2 திரைப்படமும் புஷ்பா திரைப்படமும் ஒரே தினத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
நடிகர் யாஷ் நடிப்பில் இய்குனார் பிரசாத் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கேஜிஎஃப் 2. அதிரடி சண்டைக்காட்சி கதைகளுடன் ஆக்சன் படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் முதல் பாகமே மாபெரும் வெற்றியை படைத்தது. முதல் பாகத்தை பார்த்த ரசிகர்களுக்கு இரண்டாம் பாகத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியது என்றே கூறலாம். படத்தி டீசர் கூட யூடியூபில் 200 மில்லியனிற்கும் மேல் பார்வையாளர்களை கடந்துள்ளது.
இந்த வருடம் ஜூலை 18 – ஆம் தேதி கேஜிஎஃப் 2 வெளியாகும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்ததால் பின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கேஜிஎஃப் 2 படக்குழு படத்தை இந்த ஆண்டு டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் உலாவி வருகிறது. ஆனால், டிசம்பர் 25-ஆம் தேதி நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா திரைப்படம் வெளியாகும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.
இதானால் இரண்டு திரைப்படங்களும் ஒரே தினத்தில் வெளியானால் எந்த திரைப்படம் அதிக வசூல் செய்ய போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மத்தியில், நிலவி உள்ளது. விரைவில் கேஜிஎஃப் 2 ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…