தளபதி 65 படத்தின் ஓப்பனிங் பாடலுக்கு இசையமைக்கும் ராக்ஸ்டார்..!!
தளபதி 65 படத்தின் ஓப்பனிங் பாடலுக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகும் தளபதி 65 படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கான பூஜை கடந்த மாதம் 31 ஆம் தேதி நடைபெற்றது.
அதனை தொடர்ந்து படத்திற்கான படப்பிடிப்பு கடந்த 9 ஆம் தேதி ஜார்ஜாவில் தொடங்கப்பட்டது. தற்போது படத்திற்கான படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தில் இசையமைக்கும் அனிருத் படத்திற்கான முதல் பாடலுக்கு இசையமைத்து வருகிறார். ஏற்கனவே மாஸ்டர் படத்திற்கு இசையமைத்த அணைத்து பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக வாத்தி கம்மிங் பாடலுக்கு கிரிக்கெட் வீர்ர்கள் சினிமா பிரபலங்கள் நடனம் ஆடி வீடியோ வெளிட்டு வருகின்றார்கள்.
இந்த நிலையில் தளபதி 65 படத்திற்கான ஓப்பனிங் பாடல் வாத்தி கம்மிங் பாடலை விட அருமையாக வரும் என்று அணைத்து விஜய் ராசிகளும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ள்ளார்கள். விரைவில் தளபதி 65 படத்திற்கான அடுத்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.