அட்டகாசமான இசையில்… ராக்ஸ்டார் குரலில்… வெளியானது “ஆர்ஆர்ஆர்” முதல் பாடல்.!

Published by
பால முருகன்

ஆர்ஆர்ஆர் படத்தின் முதல் பாடலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. 

இயக்குனர் ராஜமௌலி பாகுபலி திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து ஆர்ஆர்ஆர் என்ற பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கிறார்கள். மேலும் அலியா பாட், அஜய்தேவ் கான், ஸ்ரேயா சரண், மேலும் சில பல ஹாலிவுட் பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். இந்த திரைப்படம் வரும், அக்டோபர் மாதம் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

படத்திற்கு இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்த திரைப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகும் என  ஜூலை 27-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று வெளியாகியுள்ளது. நட்பை மையமாக கொண்ட இந்த பாடல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. தமிழில்  நட்பு என தொடங்கும் முதல் பாடலை எம் எம் கீரவாணி இசையில், இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். இதோ அந்த பாடல்.

Published by
பால முருகன்

Recent Posts

கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழப்பு.!

கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பயங்கர தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில்…

9 minutes ago

“மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு” – அரசாணை வெளியீடு.!

நீலகிரி : மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 20 அடுக்குமாடி குடியிருப்புகளை…

13 minutes ago

“தவெக தொண்டர்களின் செயல் கவலை அளிக்கிறது!” விஜய் வேதனை!

சென்னை : கடந்த ஏப்ரல் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தவெக சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில்…

40 minutes ago

சிறுமி உயிரிழப்பு எதிரொலி : மழலையர் பள்ளி உரிமம் ரத்து!

மதுரை : நேற்று மதுரை கே.கே நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிண்டர் கார்டன் எனும் தனியார் மழலையர் பள்ளியில்…

2 hours ago

Live : கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து முதல்… பஹல்காம் தாக்குதல் நடவடிக்கை வரை…

சென்னை : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து நேற்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் முப்படை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்…

2 hours ago

“அடுத்த 36 மணி நேரத்தில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தும்” – பாகிஸ்தான் அமைச்சர் குற்றச்சாட்டு.!

இஸ்லாமாபாத் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக, இந்தியா…

3 hours ago