அட்டகாசமான இசையில்… ராக்ஸ்டார் குரலில்… வெளியானது “ஆர்ஆர்ஆர்” முதல் பாடல்.!
ஆர்ஆர்ஆர் படத்தின் முதல் பாடலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
இயக்குனர் ராஜமௌலி பாகுபலி திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து ஆர்ஆர்ஆர் என்ற பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கிறார்கள். மேலும் அலியா பாட், அஜய்தேவ் கான், ஸ்ரேயா சரண், மேலும் சில பல ஹாலிவுட் பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். இந்த திரைப்படம் வரும், அக்டோபர் மாதம் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
படத்திற்கு இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்த திரைப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகும் என ஜூலை 27-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று வெளியாகியுள்ளது. நட்பை மையமாக கொண்ட இந்த பாடல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. தமிழில் நட்பு என தொடங்கும் முதல் பாடலை எம் எம் கீரவாணி இசையில், இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். இதோ அந்த பாடல்.
Telugu- https://t.co/vuwMb8q383
Tamil- https://t.co/VKF46yfc2c
Hindi- https://t.co/2omQXIAHJN
Kannada- https://t.co/BTsQ18OqWZ
Malayalam- https://t.co/LBbwrdH4hl #RRRMovie @mmkeeravaani @ssrajamouli @tarak9999 @AlwaysRamCharan @TSeries @LahariMusic— RRR Movie (@RRRMovie) August 1, 2021