ஆர்ஆர்ஆர் படத்தில் இணைந்த ராக்ஸ்டார் அனிருத்.!
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகிவரும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை அனிருத் பாடியுள்ளார்.
இயக்குனர் ராஜமௌலி பாகுபலி திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ஆர்ஆர்ஆர் என்ற பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கிறார்கள். மேலும் அலியா பாட், அஜய்தேவ் கான், ஸ்ரேயா சரண், மேலும் சில பல ஹாலிவுட் பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள்.
பிரமோஷன் பாடலுக்கான படப்பிடிப்பு மட்டும் நடந்து வருகிறது. இது முடிந்துவிட்டால் படத்தின் அணைத்து படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது நிலையில், படத்திற்கு இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் வருகின்ற அக்டோபர் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று மேக்கிங் வீடியோவில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் பாடியுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அனிருத் பாடியுள்ளதை இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி உறுதிப்படுத்தியுள்ளார்.
Had a great session with @anirudhofficial for RRR. Efficacy, energy, talent and a wonderful team of associates are his main assets. above all … so down to earth ❤️????
— mmkeeravaani (@mmkeeravaani) July 25, 2021