ஆப்கானிஸ்தானில் ஜனாதிபதி கட்டிட அருகே ராக்கெட் தாக்குதல்..!

ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் அமைந்துள்ள ஜனாதிபதி கட்டிட அருகே ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானை விட்டு வெளிநாட்டுப் படைகள் திரும்பப் பெற்றதிலிருந்து ஆப்கானிஸ்தானில் உள்ள முக்கிய நகரங்களைக் கைப்பற்ற தலிபான்கள் அதிகளவில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்போது ஆப்கானிஸ்தானில் மூன்றில் ஒரு பகுதியை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய படைகள் செப்டம்பர் 11-க்குள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறயுள்ளனர்.
இந்நிலையில், காபூலின் பர்வான் பகுதியில் இருந்து ஒரு காரில் இருந்து மூன்று ஏவுகணைகள் ஏவப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஏவுகணைகள் பாக்-இ அலி மர்தான், சாமன்-இ ஹுசூரி மற்றும் போலீஸ் மாவட்ட பகுதியில் விழுந்தன. ஒரு ஏவுகணை பக்ரீத் தொழுகையின் காபூல் ஜனாதிபதி மாளிகை அருகே விழுந்ததாக உள்ளூர் வட்டார செய்தி தெரிவிக்கின்றன.
உள்ளூர் செய்தி ஊடகங்களின்படி, இந்த ராக்கெட்டுகள் உள்ளூர் நேரப்படி காலை 8 மணியளவில் கார் மூலம் ஏவப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் எவ்வளவு சேதம் ஏற்பட்டது என்பது தெரியவில்லை. இதற்கிடையில், வெளிநாட்டுப் படைகள் திரும்பப் பெற்ற ஆறு மாதங்களுக்குப் பிறகுதான் ஆப்கானிய அரசு வீழ்ச்சியடையக்கூடும் என்ற அச்சமும் உள்ளது. மறுபுறம், தலிபான் ஆட்சிக்கு திரும்புவது குறித்து மக்கள் மத்தியில் அச்சம் உள்ளது.
Video by national TV shows the moment rockets landed near the Presidential Palace during Eid prayers this morning. pic.twitter.com/WmEniyfLfM
— TOLOnews (@TOLOnews) July 20, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025