பொதுஇடங்களில் புகைபிடிப்பவர்களை எச்சரிக்கும் ரோபோக்கள்…!
சிங்கப்பூரில் பொது இடங்களில் மக்களின் நடமாட்டத்தை கண்காணிக்க ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன
இன்று மனிதன் செய்யக்கூடிய பல வேளைகளை ரோபோக்களே செய்கின்றன. அந்த வகையில் வளர்ந்து வரும் தொழில் நுட்பம் காரணமாக, இன்று மனிதர்களுடைய பல கடினமான வேலைகளும் எளிதாக்கப்படுகிறது.
இந்நிலையில், சிங்கப்பூரில் பொது இடங்களில் மக்களின் நடமாட்டத்தை கண்காணிக்க ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 7 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள இந்த ரோபோக்கள், ஈடுபடுபவர்களை கண்டறிந்து எச்சரிக்கும். அதாவது, புகை பிடிப்பவர்கள், முறையாக வாகனங்களை நிறுத்தாதவர்கள் மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் ஆகியோர் ரோபோவின் கண்காணிப்பில் இருந்து தப்ப முடியாது என அதிகாரிகள் கூறுகின்றனர்.
2 ரோபோக்கள் கடந்த மாதம், சோதனை அடிப்படையில் ஈடுபடுத்தப்பட்டன. அது வெற்றி பெற்றதை தொடர்ந்து சிங்கப்பூர் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.