மெக்சிகோவில் கொரோனா வார்டில் பணி அமர்த்தப்பட்ட ரோபோ.!
மெக்சிகோவில் கொரோனா வார்டில் நோயாளிகளுக்கும், மருத்துவர்களுக்கும் இடையே தகவல் பரிமாற்றத்தை எளிதாக்க ரோபோக்கள் பணியமர்த்தப்பட்டன.
மெக்சிகோவில் கொரோனா வார்டில் நோயாளிகளுக்கும், மருத்துவர்களுக்கும் இடையே தகவல் பரிமாற்றத்தை எளிதாக்க ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றனர். வேனி என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ வடக்கு மெக்சிகோவில் உள்ள நோவா மருத்துவமனையில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
கொரோனா வார்டில் ரோந்து பணியில் ஈடுபடும் வேனி ரோபோ மூலமாகவே மருத்துவர்கள் நோயாளிகளிடம் உரையாடுகின்றனர். அதன் மூலமே அவர்களின் உடல்நிலை குறித்த தகவல்களை பெறுகின்றனர். இதனால் மருத்துவர்கள் தொற்றுக்கு ஆளாகும் அபாயமும் குறைகிறது.