மொறு மொறு சீஸ் கார்ன் கச்சோரி எப்படி செய்வது என்பதை பற்றி அறிவீரா
குழந்தைகளுக்கு பிடித்த சீஸ் உணவுகளில் சீஸ் கார்ன் கச்சோரியும் ஒன்று.இதனை ஒரு முறை செய்து கொடுங்கள் அவர்கள் இதனை விரும்பி உண்பார்கள்.
- சீஸ் கார்ன் கச்சோரி எப்படி செய்வது என்பதை பற்றி அறிவீரா?
சீஸ் கார்ன் கச்சோரி எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறிவோம்.
தேவையான பொருட்கள்
மைதா – 2 கப்
சீஸ் – 2௦௦ கிராம்
ஸ்வீட் கார்ன் – 2 கப்
இஞ்சி, பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
கரம் மசாலா – 2 டீஸ்பூன்
வெங்காயம் -1(நறுக்கியது)
எலுமிச்சை பழம் சாறு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஸ்வீட் கார்னை எடுத்து மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும். அதற்கு பிறகு ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் மைதாமாவு , உப்பு , சிறிதளவு தண்ணீர் மற்றும் எண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து சிலமணி நேரம் அப்படியே ஊற விடவும்.
அதற்கு பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு வெங்காயம் ,அரைத்த கார்ன், இஞ்சி, பூண்டு விழுது, கரம் மசாலா, உப்பு ஆகியவற்றை போட்டு வதக்க வேண்டும். நன்றாக வதங்கியவுடன் எலுமிச்சைசாறு சேர்க்கவும். பின்னர் சீஸை துருவி சேர்த்து கிளறி இறக்க வேண்டும். பின்பு மைதாமாவை எடுத்து ரொட்டிக்கு தட்டுவது போல் தட்டி அதனுள் கார்ன் கலவையை வைத்து மூடி விட வேண்டும்.
அதற்கு பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தட்டி வைத்துள்ள கார்ன் உருண்டைகளை எண்ணெய்யில் போட்டு நன்றாக பொரித்து எடுக்கவும். இப்பொது சூடான சுவையான சீஸ் கார்ன் கச்சோரி ரெடி.