விஜய் சாருடன் ரோட்டுகடை பிரியாணி.! அடடா… நெகிழும் நெல்சன்.!
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள டார்க் ஆக்சன் திரைப்படம் “பீஸ்ட்”. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த நிலையில், விஜய்யுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து நெல்சன் திலீப் குமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் பேசியது ” நான் விஜய் சாருடைய தீவிர ரசிகன்.அதுனால் பீஸ்ட் படத்தில் மிகவும் கடினமாக ரசித்து வேலை செய்தோம்..படமும் நல்லா வந்திருக்கு.விஜய் சார் ரொம்ப சிம்பிளா இருப்பார். மிகவும் கூலான ஒரு ஆள். அவங்க என்ன நினைப்பாங்க. இவங்க என்ன நினைப்பாங்க என்று எல்லாம் நினைக்க மாட்டார்…
விஜய் சார் கிட்ட எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது வாழ்க்கையை சிம்பிள் அண்ட் ஹம்பிளா அவர் கொண்டு போற விஷயம் தான். அவர், ஷாப்பிங் போனாக்கூட ரொம்பவே சிம்பிளாக இருக்கும் பொருட்களைத்தான் வாங்குறார். நூறு ரூபாய் பிரியாணியா இருந்தாக்கூட, அதையும் சந்தோஷமா சாப்பிடுறார்…
ஒருநாள் இரவு அவரோடு சாப்பிட உட்காந்தோம். சாதாரண பிரியாணி சாப்பிட்டுக்கிட்டு இருந்தார்.இதை வெளியே நானே சாப்பிட்டுட்டு வந்திருப்பேனே’ன்னு அவர்கிட்ட சொன்னேன். அதற்கு அவர் சிரிச்சுக்கிட்டே ‘இவ்ளோதான் லைஃப்’னு சொன்னார்…
பீஸ்ட் படப்பிடிப்பு தளத்தில் நமக்கு மத்த பிரஷர் எதுவும் ஏற்படாம அக்கறையாகவும், அன்பாகவும் பாத்துப்பாரு அதனாலேயே ‘பீஸ்ட்’ தருணங்கள் காலம் கடந்தும் இனிமையா இருக்கும்” என நெகிழிச்சியுடன் நெல்சன் கூறியுள்ளார்.