மறைந்த சுஷாந்த் சிங் பெயரில் சாலை.! ரசிகர்கள் மகிழ்ச்சி.!

மறைந்த சுஷாந்த் சிங்கிற்கு நினைவு கூறும் வகையில் வகையில் ,சாலையின் பெயரை அவரது பெயரில் மாற்றம் செய்துள்ளனர்.
தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து பிரபலமான சுஷாந்த் சிங் ராஜ்புத்
கடந்த ஜூன் 14அன்று மும்பை BANDRA பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இது ஒட்டுமொத்த திரையுலகையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
மறைந்த சுஷாந்த் சிங் நடித்த கடைசி படமான “Dil Bechaara’ படத்தை டிஸ்னி மற்றும் ஹாட்ஸ்டாரில் வரும் ஜூலை 24ம் தேதி வெளியிடவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். முகேஷ் சாப்ரா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சுஷாந்த் சிங்கிற்கு ஜோடியாக சஞ்சனா சிங் நடித்திருந்தார் . அண்மையில் அதன் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் தற்போது மறைந்த சுஷாந்த் சிங்கிற்கு நினைவு கூறும் வகையில் பீகாரில் உள்ள பூர்னியாவில் உள்ள சாலைக்கு சுஷாந்த் சிங் ராஜ்புத் சாலை என்று மறுப் பெயரிடப்பட்டுள்ளது.அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.சமீபத்தில் மேயர் சவிதா தேவி அளித்த ஒரு ஊடக உரையாடலில், மறைந்த சுஷாந்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஒரு ரவுண்டானாவில் உள்ள சாலைக்கு அவரது பெயரிடப்படும் என்று கூறியிருந்தார்.அதன்படி ஃபோர்டு நிறுவனத்தின் ரவுண்டானாவில் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் சவுக் என்றும் ,மதுபானியிலிருந்து மாதா செல்லும் சாலைக்கு சுஷாந்த் சிங் ராஜ்புத் சாலை என்றும் மறுப் பெயரிடப்படும் என்று கூறியுள்ளார்.
The HOMETOWN PURNEA of Sushant Singh Rajput❤#SushantInOurHeartsForever @PurneaTimes @Bihar_se_hai
In his MEMORY???? pic.twitter.com/ouuzGqt3JN— Khushali Priya (@PriyaKhushali) July 9, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024