திரைப்படத்துறையினர் அரசுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என ஆர்.கே.செல்வமணிவேண்டுகோள்!
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலின் தீவிரத்தை கட்டுப்படுத்த, இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நிதியுதவி வழங்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில், ஆர்.கே.செல்வமணி அவர்கள் இன்று செய்தியாளர் சந்திப்பின் போது பேசுகையில், கொரோனாவுக்கு தற்போது வரை மருந்து இல்லாமல் இருப்பதால் இது ஒரு மிக பெரிய கொடுமையான நோய். ஒரு முறை இந்த நோய் வந்துவிட்டால் இதனை கட்டுபடுத்த முடியாமல் போய் விடும்.
அமெரிக்கா , இத்தாலி போன்ற வளர்ந்த நாடுகளே இதனை சமாளிக்க முடியாமல் இருக்கின்றது. எனவே பொதுமக்கள் இதனை உணர வேண்டும். இந்தியாவில் போதுமான அளவிற்கு வென்டிலேட்டர் வசதி இல்லை. இந்த நோய் வந்துவிட்டால் அதனை தடுக்க முடியாமல் போய் விடும்.
இந்நிலையில், திரைப்பட கலைஞர்கள் இந்த நேரத்தில் அரசுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்றும், பெஃப்சி சார்பாக 10 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்குவதாகவும் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.