கொரோனா பரவும் அபாயம்.! 12-வயது குழந்தைகள் முககவசம் அணிவது கட்டாயம் – உலக சுகாதார நிறுவனம்.!

கொரோனா பாதிப்பு அதிகமாகி உள்ளதால் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி உள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் 2 கோடியே 36 லட்சம் பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனாவால் 8 லட்சத்து 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதனை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது கொரோனாவின் தாக்கம் தென்கொரியா, ஐரோப்பியா நாடுகள் மற்றும் லெபனானில் மீண்டும் அதிகரித்துக்ளதை அடுத்து, அங்குள்ள 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி உள்ளது. மேலும் ஒருவர் மற்றவர்களிடமிருந்து ஒரு மீட்டர் தூரமாவது குறைந்தபட்ச தனிமனித இடைவெளி இருக்க வேண்டும். ஆனால் அதற்கான உத்தரவாதம் தரமுடியாத சூழலில் மீண்டும் கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.