அதிகரிக்கும் கொரோனா தொற்று : மலேசியாவில் மீண்டும் புதிய கட்டுப்பாடுகள்!

Published by
Rebekal

அதிகரிக்கும் கொரோனா தொற்று காரணமாக மலேசியாவில் மீண்டும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் உலகின் பல நாடுகளில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. சில இடங்களில் மட்டுமே தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மலேசியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. மலேசியாவில் உள்ள மூன்று மாநிலங்களில் தற்பொழுது கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அங்கு புதிய கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூறிய மலேசியாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் இஸ்மாயில் அவர்கள், கொரோனா வைரஸால் இதுவரை 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மலேசியாவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நேற்று 660 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும் தொற்று பரவாமல் இருப்பதற்காக அதிகம் பரவி வரக் கூடிய மாநிலங்களான கோலாலம்பூர், புத்ராஜெயா, சிலாங்கூர் ஆகிய மாநிலங்களுக்கு இரு வாரங்களுக்கு சில கூடுதலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த மூன்று மாநிலங்களிலும் வருகிற இரு வாரங்களுக்கு ஒரு வீட்டிலிருந்து ஒருவர் மட்டுமே அத்தியாவசிய பொருள் வாங்க வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவர் எனவும், உயர் கல்வி, பள்ளிகள், பொழுதுபோக்கு, வழிபாட்டுத்தலங்கள் ஆகிய அனைத்துமே மூடப்பட்ட நிலையில் இருக்கும். விளையாட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கப்படும் எனவும், நேர கட்டுப்பாடுகளுடன் ஓட்டல், கடைகள் மற்றும் பெட்ரோல் பங்க், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவை செயல்படுத்தப்படும் எனவும், விமான நிலையம் துறைமுகம் செயல்படும். ஆனால் திருமண நிகழ்ச்சிகளுக்கு இந்த இரு வாரங்களில் சுத்தமாக அனுமதி கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

11 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

16 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

16 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

17 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

17 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

17 hours ago