அதிகரிக்கும் கொரோனா தொற்று : டோக்கியோவில் அவசரநிலை நீட்டிப்பு….!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்கு கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அவசரநிலை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கொரோனா பரவல் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகளுடன் தான் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜப்பானில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு தினசரி 10 ஆயிரத்துக்கும் அதிகமாக பாதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது.
எனவே, ஒலிம்பிக் போட்டி நடைபெறும் தலைநகர் டோக்கியோவில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை ஏற்கனவே கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் இருந்த நிலையில், தற்பொழுதும் டோக்கியோவை சுற்றியுள்ள 4 நகரங்களிலும் அவசரநிலை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.