இறுதி சுற்றுக்கு முன்னேறிய ரிஷி சுனக்.! இங்கிலாந்து பிரதமராகும் இந்திய வம்சாவளி பிரபலம்.!?
இங்கிலாந்து பிரதமர் வேட்பாளராக இறுதி கட்ட போட்டிக்கு இந்திய வம்சாவளி நபர் ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு போட்டியாக லிஸ் டிரஸ் களத்தில் இருக்கிறார்.
இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து அந்த பதவிக்கு போட்டி பலமானது. இதில், இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் , லிஸ் டிரஸ், பென்னி உட்பட 8 பேர் போட்டி போட்டனர்.
இதில் இதுவரை நடைபெற்று சுற்று வாக்கெடுப்பில் ரிஷி சுனக் 137 வாக்குகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறார். இரண்டாம் இடத்தில லிஸ் டிரஸ் 113 வாக்குகள் பெற்று இருக்கிறார். 105 வாக்குகள் பெற்று பென்னி இறுதி போட்டியில் இருந்து வெளியேறி உள்ளார்.
இதனால் கடைசி சுற்றாக கன்சர்வேட்டிவ் கட்சியின் 2 லட்சம் உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள். அதில் , ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் இருவரிடையே போட்டி நடைபெறும். இதில் வெற்றி பெறுபவர்கள் தான் இங்கிலாந்து பிரதமராக தேர்ந்தெடுக்க படுவார்கள்.
இதில் வெற்றி வாய்ப்பு இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் அவர்களுக்கு தான் அதிகமாக இருப்பதாக கருத்துக்கள் நிலவி வருகின்றன.