Rishi sunak : இங்கிலாந்தின் புதிய பிரதமராகிறார் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்
பிரிட்டனின் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ரிஷி சுனக்கை எதிர்த்து போட்டியிட்ட போட்டியாளரான பென்னி மார்டண்ட் போட்டியிலிருந்து விலகியதை தொடர்ந்தும் பெரும்பாலான எம்பிக்களின் ஆதரவுடன் பிரதமராகிறார் ரிஷி சுனக்.
42 வயதான அவர் இரண்டு மாதங்களுக்குள் நாட்டின் மூன்றாவது பிரதம மந்திரியாக மாறுவார், அவருக்கு முன்னோடியாக இருந்த லிஸ் ட்ரஸ் ஆறு வாரங்களுக்குப் பிறகு பொருளாதார சந்தைகளை உலுக்கிய ஒரு பொருளாதாரத் திட்டத்தால் பதவியில் இருந்து விலகினார்.