தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி கேப்டன் விஜயகாந்த்தின் உயிர் பிரிந்தது. விஜயகாந்த் மறைவை அறிந்த செய்தி கேட்டு அவரது குடும்பத்தினர், தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் என அனைவரது மனதையும் வெகுவாக பாதித்தது.
நேற்று தனியார் மருத்துவமனையில் இருந்து முதலில் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு, சாலிகிராமத்தில் இருந்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் அவரது உடல் கொண்டுசெல்லப்பட்டது. அங்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலர் அஞ்சலி செலுத்தினர்.
விஜயகாந்திற்கு இறுதி அஞ்சலி செலுத்த வரும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதன் காரணமாக கட்சி அலுவலகத்தில் இருந்த விஜயகாந்த் உடல் இன்று அதிகாலை சென்னை தீவு திடலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கும் திரளான தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதே போல சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களும் கேப்டன் விஜயகாந்திற்கு தங்கள் இறுதி அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…