ரியோ ஜெயிப்பது மட்டுமல்ல ஆரி அண்ணா ஜெயித்தாலும், மற்ற போட்டியாளர்கள் ஜெயித்தாலும் எனக்கு சந்தோசம் தான். எனவே யாரையும் தவறாக பேசாதீர்கள் என ரியோவின் மனைவி பதிவிட்டுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த 100 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. தற்பொழுது பிக் பாஸ் இல்லத்தில் ஆரி, ரியோ, ரம்யா, பாலாஜி, சோம், கேபி ஆகிய ஆறு பேர் மட்டுமே உள்ளனர். இவர்களில் ஆரிக்கு தான் அதிகளவில் ரசிகர் பட்டாளம் உள்ளது. அதே சமயம் ரியோ ரசிகர்களும் அதிகளவில் தான் இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி சமூகவலைதளங்களில் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. யார் தகுதியற்றவர் என மாறி மாறி அடித்துக் கொள்கின்றனர்.
மேலும் வாக்குப் போடுவது குறித்தும் சில சர்ச்சையான கருத்துக்களும் பதிவிடப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரியோயின் மனைவி ஸ்ருதி அவர்கள் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பிக்பாஸில் ரியோ ஜெயித்தால் தனக்கு அதிகம் சந்தோசம் தான் எனவும் அதே போல தான் ஆரி அண்ணா ஜெயித்தாலும் நான் சந்தோசப்படுவேன் எனவும் மற்றும் போட்டியாளர்கள் ஜெயித்தாலும் நான் சந்தோஷப்படுவேன் எனவும் கூறிய அவர், இன்னும் சில தினங்களில் எனது உலகம் என் கையில் முழுவதுமாக வந்துவிடும் அதுவே எனது சந்தோசம் என கூறியுள்ளார். மேலும், ரசிகர்களிடம் தயவுசெய்து மற்ற போட்டியாளர்களை பற்றி பேச வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…