விண்வெளிக்கு பறந்த ரிச்சர்ட் பிரான்சன் குழு பாதுகாப்பாக தரையிறங்கியது…!

Default Image

பல தனியார் நிறுவனங்கள் மனிதர்களை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட விர்ஜின் கேலடிக் நிறுவனமும் இந்த பணியில் ஈடுபட்டு வருகிறது. பிரிட்டன் கோடீஸ்வரரான ரிச்சர்ட் பிரான்சனுக்கு சொந்தமான நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் இதுவரை வெற்றியடைந்து தான் உள்ளது.

சோதனை முறையில், யூனிட்டி 22 விண்கலம் மூலம் ரிச்சர்ட் பிரான்சன் தனது விண்வெளி பயணத்தை தொடங்கினார். இந்த விண்வெளி பயணத்தில், ரிச்சர்ட் பிரான்சன் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்ரீஷா பண்ட்லா உள்ளிட்ட 6 பேர் பயணம் மேற்கொண்டனர்.

யூனிட்டி விண்கலம் விமானத்தில் இருந்து பிரிந்து, விண்வெளியை நோக்கி தனியாக பறந்தது. அங்கு 88கி.மீ உயரத்தை அடைந்த பின், விண்வெளியை நெருங்கியதும், அங்கு புவிஈர்ப்பு விசை கொஞ்சம் குறைவாக இருந்துள்ளது. அந்த இடத்தில் விண்கலம் மிதந்தது. பூமியின் புவியீர்ப்பு விசைக்கு அப்பால், எடையற்ற தன்மையை 6 பேரும் உணர்ந்தனர். விண்வெளியில் இருந்தபடி விர்ஜின் கேலடிக் குழுவினருக்கு பிரான்சன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

சிறிதுநேரம் வெற்றிகரமாக மிதந்த பின், எதிர்திசையில் எஞ்சினை இயக்கி  தரையிறங்கியது. விண்வெளிக்கு சென்று வந்த இந்த குழுவினரை அனைவரும் வாழ்த்தினர். இதுகுறித்து, பிரான்சன் கூறுகையில், இது தனது வாழ்நாளின் சிறந்த அனுபவம், சிறுவயது கனவு நனவானது என மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார். ரிச்சர்ட் பிரான்சன் தனது 17 ஆண்டு கால கடின உழைப்பாலும், விடா முயற்சியாலும் தனது சிறுவயது கனவை நனவாக்கியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்