மீண்டும் இணையும் விஸ்வாசம் கூட்டணி..?
வலிமை படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவாவுடன் கூட்டணி வைக்கவுள்ளார்.
தமிழ் சினிமா ரசிகர்களிடையே தல என்று அன்போடு அழைக்கப்படுபவர் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார்.இவரது படம் வருகிறது என்றாலே ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு குறைவே இருக்காது.
இந்நிலையில் தல அஜித் ,தனது 60 ஆவது படமான வலிமை படபிடிப்பு பணிகளில் இறங்கியுள்ளார்.மேலும் இந்த படத்தில் அஜித் காவல் துறை அதிகாரியாக நடிக்க இருப்பதால் தனது உடல் எடையை குறைத்து உடலை கட்டுக்கோப்பாக வைக்கும் பணியில் இறங்கியுள்ளார்.
இந்த வலிமை படத்தை தொடர்ந்து அடுத்ததாக யாருடன் கூட்டணி அமைக்க போகிறார் என்று ரசிகர்கள் குழம்பி வருகிறார்கள் அந்தவகையில் தற்பொழுது நமக்கு கிடைத்த தகவல் அடுத்ததாக நடிகர் அஜித் சிறுத்தை சிவாவுடன் கூட்டணி வைத்துக்கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.