‘ரிட்டன் – எக்ஸ்சேஞ்ச் கிடையாது’ – கணவரை ஆன்லைனில் ஏலம் விட்ட பெண்..!

அயர்லாந்தை சேர்ந்த ஜான் மற்றும் லிண்டா தம்பதியினர் 2019ஆம் ஆண்டு திருமணம் செய்த ,நிலையில், லிண்டா விளையாட்டாக கணவனை இணையத்தில் ஏலம் விட்டுள்ளார்.
அயர்லாந்தை சேர்ந்த ஜான் மற்றும் லிண்டா தம்பதியினர் கலந்து 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், ஜான் தனது இரண்டு மகன்களை அழைத்துக் கொண்டு வெளியே மீன்பிடிக்க சென்ற போது, திடீரென லிண்டா தனது கணவரை ஆன்லைனில் விற்பனை ஏலத்திற்கு விட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது இணையப்பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், ஜான் எனது கணவர் 6 அடி 1 அங்குலம் உடையவர். அவருக்கு வயது 37. அவர் மீன்பிடிக்க விரும்புவார். மிகவும் நல்லவர். இதற்கு முன்பு இவருக்கு ஏராளமான உரிமையாளர்கள் உண்டு. அவருக்கு முறையாக உணவு வைத்து தண்ணி காட்டினால் மிகுந்த விசுவாசத்துடன் இருப்பார். ஆனால் இவருக்கு இன்னும் சில பயிற்சிகள் தேவைப்படுகிறது. எனக்கு அதற்கான பொறுமையும் நேரமும் இல்லை. இந்த விற்பனை இறுதியானது என பதிவிட்டு அதில் ரிட்டன் மற்றும் எக்ஸ்சேஞ்ச் கிடையாது என்று பதிவிட்டிருந்தார்.
விளையாட்டாக இவர் செய்த காரியத்தை உண்மை என நம்பி 12 பெண்கள் இந்த ஏலத்தில் பங்கேற்று ஜானை வாங்க முயற்சி செய்தனர். இந்த விளம்பரத்தை பார்த்து அவரது நண்பர்கள் ஜானுக்கு தெரிவிக்கும் வரை, ஜானுக்கு இதுகுறித்து தெரியவில்லையாம். இந்நிலையில், வர்த்தக விதிகள் மீறப்பட்டதாகக் கூறி, டிரேட் மீ இணையதளம் அந்த விளம்பரத்தை குறுகிய நேரத்தில் நீக்கியது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி கொள்கை விவகாரம் முதல்! “இந்தியா” கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் வரை!
February 18, 2025
படித்தது CBSE., பொதுத்தேர்வு மாநில பாடத்திட்டத்தின் கீழ்? பட்டுக்கோட்டையில் புது குழப்பம்!
February 18, 2025
நள்ளிரவில் தேர்தல் ஆணையரை நியமித்தது ஏன்? ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
February 18, 2025
குல்தீப்பா? சக்கரவர்த்தியா? போட்டிக்கு முன் அடித்துக்கொள்ளும் ரோஹித் சர்மா vs கம்பீர்.!
February 18, 2025
பெண்களுக்கென ‘பிங்க் ஆட்டோ’ திட்டம்… எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
February 18, 2025