வெடி பொருட்களை கண்டறிய உதவிய 7 வயது எலிக்கு பணி ஒய்வு…!

Default Image
  • ஆப்பிரிக்காவில் கம்போடியாவில் கண்ணிவெடி மற்றும் வெடிப்பொருட்கள் கண்டறிய பெரிய வகை எலி  பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • 7 வயது நிரம்பிய மகாவா என்ற அந்த எலி, இதுவரை 71 கண்ணிவெடிகளையும் 12-க்கும் மேற்பட்ட வெடி பொருட்களையும் கண்டறிந்ததாக கூறப்படுகிறது.

இன்று ஒவ்வொரு நாடுகளிலும் வெடிபொருட்களை கண்டறிய அதிகமாக மோப்ப நாய்களை தான் பயன்படுத்துவதுண்டு. ஆனால் ஆப்பிரிக்காவில் கம்போடியாவில் கண்ணிவெடி மற்றும் வெடிப்பொருட்கள் கண்டறிய பெரிய வகை எலி  பயன்படுத்தப்பட்டுள்ளது.

 இந்த நிலையில், 7 வயது நிரம்பிய அந்த எலிக்கு மகாவா என பெயரிடப்பட்டுள்ளது. இந்த எலி இதுவரை 71 கண்ணிவெடிகளையும் 12-க்கும் மேற்பட்ட வெடி பொருட்களையும் கண்டறிந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மகாவாவின் இந்த செயலுக்கு  துணிச்சல் மிக்க விலங்கு என்று விருது அளிக்கப்பட்டுள்ளது.

உருவத்தில் சிறியதாக இருப்பினும் ஏராளமான மக்களின் உயிரை இந்த மகாவா  காப்பாற்றிய பெருமை பெற்றுள்ளது. இந்த எலி 5 ஆண்டுகளாக இந்த பணியை மேற்கொண்டு வருகிற நிலையில், மகாவா ஒய்வு பெறும் வயதை எட்டியுள்ளதால் அதற்கு பணி ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்