முதியோர் இல்லத்தில் தீ விபத்து: 15 பேர் உயிரிழப்பு., 11 பேர் காயம்.!

Default Image

உக்ரைனில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

உக்ரைன் நாட்டின் கிழக்கு நகரமான கார்கிவ் நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்ததாக  உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர் என்றும் அவர்களில் 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

கோல்டன் ஹவர் தனியார் பராமரிப்பு இல்லத்தில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆனதாக கூறியுள்ளனர். எலக்ட்ரிக் ஹீட்டர்களை கவனக்குறைவாக பயன்படுத்தியதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கும் என முதல்கட்ட விசாணையில் தெரியவந்துள்ளது.

நர்சிங் ஹோம் ஆக மாற்றப்பட்ட அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் மேல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக அவசர அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த பயங்கர தீ விபத்து குறித்து அந்நாட்டு பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் அரசாங்கத்தின் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க சிறப்பு அரசு ஆணையம் அமைக்கப்பட உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்