ஆளுநர் கையெழுத்து பின்னணி…. ஆன்லைன் சூதாட்டம் தங்க முட்டையிடும் வாத்து.! ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கருத்து.!
ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் மூலம் மத்திய அரசு கோடிக்கணக்கில் வரியை பெற்று வருகிறது. தங்க முட்டையிடும் வாத்தை யார் தான் அறுப்பார்கள். – ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்த தமிழக சட்டப்பேரவை மசோதாவுக்கு இன்னும் ஆளுநர் ஆர்.என்.ரவி கையெழுத்திடாமல் இருக்கிறார். அதற்கு அரசியல் தலைவர்கள் பலர் தங்கள் விமர்சனத்தை முன்வைத்து வருகிறார்கள்.
தற்போது ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கூறுகையில், ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் மூலம் மத்திய அரசு கோடிக்கணக்கில் வரியை பெற்று வருகிறது. மாநில அரசுக்கும் ஜிஎஸ்டி வரி வசூலிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இது போக சட்டபூர்வமாக தடை வராமல் இருக்க ஆன்லைன் நிறுவனங்கள் செலவு செய்ய தயாராக இருக்கிறது. இப்படி இருக்கும் போது ஆளுநர் கையெழுத்திடாமல் இருப்பதன் பிண்ணனியை நீங்களே புரிந்து கொள்ளுங்கள். தங்க முட்டையிடும் வாத்தை யார் தான் அறுப்பார்கள்.என ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார்.