தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி நியமனம்.!
- நடிகர் சங்க தேர்தலை வருகின்ற ஜூன் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
- இந்நிலையில் நடிகர் சங்க தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் என்பவர் நியமிக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிந்தது. இதையெடுத்து தமிழக அரசு கிடப்பில் உள்ள பணிகளை மேற்கொள்ள சேகர் என்பவரை தனி அதிகாரியாக நியமனம் செய்தது.
பின்னர் தனி அதிகாரியாக நியமனத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விஷால் தரப்பில் மனுதாக்கல் ஓன்று தாக்கல் செய்யப்பட்டது.அதில் தனி அதிகாரியாக நியமனத்தை தடை செய்யவேண்டும் என கூறப்பட்டது.அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தனி அதிகாரியாக நியமனத்தை தடை விதிக்க முடியாது என உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து விஷால் தரப்பில் தயாரிப்பாளர் சங்க தேர்தலை உடனடியாக நடத்த உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.பின்னர் நீதிபதி தயாரிப்பாளர் சங்க தேர்தலை வருகின்ற ஜூன் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் எனவும் தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் சிறப்பு அதிகாரி நியமிக்கப்படுவர் என உத்தரவிட்டது.
இந்நிலையில் இன்று தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் நியமிக்கப்பட்டார்.