கொரோனா அச்சம் காரணமாக இந்திய பயணிகளுக்கு கட்டுபாடுகள்: துருக்கி..!
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்திய பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது துருக்கி அரசு.
கொரோனா பரவல் உலக நாடுகளை பெருமளவு பாதித்து வருகிறது. இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தடுப்பு நடவடிக்கைகளையும் உலக நாடுகள் முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் தற்போது துருக்கி அரசு, இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
துருக்கி செல்லும் இந்திய பயணிகள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்த சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இந்த கட்டுப்பாடுகள் இந்திய பயணிகளுக்கும், பயண தேதிக்கு முன்னதாக 14 நாட்களுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து வரும் வெளிநாட்டு பயணிகளுக்கும் இது பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து பயணிகள் 14 நாட்கள் தனிமை படுத்திக்கொள்ளவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தனிமைப்படுத்துதலில் இருந்து உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.