பாகிஸ்தான் பிரதமருக்கு கொரோனா தோற்று உள்ளதா? சோதனைக்கு ஒப்புக்கொண்டதாக உதவியாளர் தகவல்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடுகளிலும் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இதன் பாதிப்பு பாகிஸ்தானிலும் அதிகரித்து கொண்டு வரும் நிலையில் அங்கு இதுவரை 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அண்மையில் பாகிஸ்தானின் பிரதமராகிய இம்ரான்கானை பிரபல அறக்கட்டளை தலைவர் பைசல் எடி என்பவர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த சந்திப்பு நடந்த சில தினங்களுக்கு பிறகு பைசலுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனால் அவருடன் ஆலோசனை செய்த பிரதமர் இம்ரான்கான்க்கும் இந்த தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்ற அச்சம் வலுத்ததால், அவர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் தனிமையாக இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் கொரோனா பரிசோதனையை இம்ரான்கான் மேற்கொள்ள ஒப்புக் கொண்டதாக அவரது உதவியாளர் கூறியுள்ளார். அதாவது பிரதமர் இம்ரான்கான் நாட்டின் பொறுப்புள்ள குடிமகன் என்பதை நிரூபிப்பதற்காக இந்த பரிசோதனை செய்வார் என அவரது உதவியாளர் கூறியுள்ளார்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…