மதிமுகவில் இருந்து விலகுகிறேன் – திருப்பூர் துரைசாமி
மதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி அறிவிப்பு.
மதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி அறிவித்துள்ளார். முன்னதாக மதிமுக அவை தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக துரைசாமி வைகோவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பின்போதும், அவைத்தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும், மதிமுக எதற்காக உருவாக்கப்பட்டது அதிலிருந்து விலகி வாரிசு அரசில் ஈடுபடுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சமீபத்தில் மதிமுக மீது அதிருப்தி அடைந்து, கட்சியை திமுகவுடன் இணைக்கக் கோரிய அக்கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, தற்போது மதிமுகவில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.