கடந்த மார்ச் 8, 2014 அன்று 227 பயணிகள் மற்றும் 12 விமான பணியாளர்களுடன் MH370 எனும் விமானம் தெற்கு மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து சீனாவின் பெய்ஜிங் புறப்பட்டது . ஆனால் குறிப்பிட்ட இடத்திற்கு செல்லும் முன்னரே நடு வான்வழியில் காணாமல் போனது குறிப்பிடத்தக்கது. உலகளாவிய பல்வேறு அமைப்பினரின் தீவிர தேடுதல் நடவடிக்கைகளுக்கு பிறகும் விமானம் காணாமல் போன இடம் பயணித்தவர்கள் பற்றிய விவரம் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை.
பேரக்குழந்தைகளை பார்க்க ஆந்திராவில் இருந்து அமெரிக்கா பயணம்… 6 பேர் உயிரிழப்பு.!
இந்த தொலைந்து போன விமானத்தை கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட போதும், எதுவும் கைகொடுக்காத நிலையில் , தற்போது சர்வதேச விண்வெளி நிபுணர்கள் ஜீன்-லூக் மார்கண்ட் மற்றும் பைலட் பேட்ரிக் பிளெல்லி ஆகியோர் காணாமல் போன விமானம் பற்றிய தகவல்களை கண்டறிய முடியும் எனவும், அதற்கு சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.
இதுகுறித்து சீனா செய்தி நிறுவனம் ஒன்று பல்வேறு தகவல்களை பதிவிட்டுள்ள்ளது. விண்வெளி நிபுணர்களான ஜீன்-லூக் மார்கண்ட் மற்றும் பைலட் பேட்ரிக் பிளெல்லி ஆகியோர் காணாமல் போன விமானம் பற்றிய தரவுகளை சேகரிக்க முடியும் எனவும், இதற்கு மலேசிய அரசாங்கமும், ஆஸ்திரேலிய அரசாங்கமும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததாக குறிப்பிட்டுள்ளது.
லண்டனில் உள்ள ராயல் ஏரோநாட்டிக்கல் அமைப்பில் ஆராய்ச்சியாளர்கள் இந்த விவகாரம் குறித்து உரையாற்றியுள்ளனர். அதில், காணாமல் போன விமானம் குறித்த தகவல்களை 10 நாட்களில் கண்டறிய முடியும். நாங்கள் அதற்கான எழுத்துமுறை விளக்கங்களை முடித்துவிட்டோம். எங்களிடம் ஒரு ஆய்வறிக்கை உள்ளது. அதனை கொண்டு திட்டமிட்டு செயல்பட்டால் 10 நாட்களில் தகவல்கள் கிடைக்கும். இது குறைவான காலமாக இருக்கலாம். MH370இன் காணாமல் போனது பற்றி யாருக்கும் முழு விவரம் தெரியாது. ஆனால், இது ஒரு நம்பத்தகுந்த வழிமுறை நிச்சயம் கண்டறிய முடியும் என அவர்கள் தெரிவித்தனர்.
இந்த விமான காணாமல் போனது பற்றி ஆராய்ச்சியாளர்கள் மேலும் கூறுகையில், விமானம் வேண்டுமென்றே கடத்தப்பட்டு ஆழ்கடலில் வீழ்த்தப்பட்டு இருக்கலாம் என்ற தகவல் அடிப்படையில் இந்த ஆய்வறிக்கை முன்மொழியப்பட்டுள்ளது. இந்த விமானம் அனுபவம் வாய்ந்த விமானியால் கடத்தப்பட்டிருக்கலாம் என்று நாங்கள் நினைக்கிறோம்,
காணாமல் போன சமயத்தில் விமானத்தின் டிரான்ஸ்பாண்டர் அணைக்கப்பட்டது. இந்தோனேசியா, இந்தியா மற்றும் மலேசியா வான்வெளி பரப்புகளுக்கு இடையே, ஆள் நடமாட்டம் இல்லாத நிலத்தில் விமானம் பறந்து கொண்டு இருந்தபோது திடீரென அதன் திசையில் மாற்றம் ஏற்பட்டதாகவும் விண்வெளி நிபுணர்களான ஜீன்-லூக் மார்கண்ட் மற்றும் பைலட் பேட்ரிக் பிளெல்லி ஆகியோர் குறிப்பிட்டனர்.
சென்னை : வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் எதிரொலியாக, மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கிண்டி அரசு மருத்துவமனையில்…
இலங்கை : இலங்கையின் 17-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று 7 மாணிக்கு தொடங்கியது. இன்று மாலை 4 வரை…
சென்னை : சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. வடகிழக்கு பருவமழையின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவரை கத்தியால் தாக்கிய விக்னேஷை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க சைதாப்பேட்டை…
செஞ்சுரியன் : தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டியானது இன்று செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்றது. இதில்…