தாக்குதல் நடந்தாலும் மீட்பு நடவடிக்கை தொடரும் – இங்கிலாந்து பிரதமர்!

Default Image

காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடைபெற்றாலும், மீட்பு நடவடிக்கை தொடரும் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் தெரிவித்துள்ளார். 

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டு மக்கள் மற்றும் நாட்டிலுள்ள பிற நாட்டினர்கள் அனைவரும் அவசர அவசரமாக நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில், நேற்று திடீரென காபூல் விமான நிலையத்தின் அருகே இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றது. இந்த குண்டுவெடிப்பில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் மற்றும் ஐநா சபை கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இதுகுறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், காபூலில் நடந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் அங்கு மீட்பு நடவடிக்கையை இறுதி வரை தொடர வேண்டியதன் முக்கியத்துவத்தை காட்டுவதாக தெரிவித்துள்ளார். மேலும் முடிந்தவரை  காபூலில் மீட்பு நடவடிக்கை வேகமாக நடைபெற்று வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்