குடியரசு தின விழா:தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 100000 போலீசார்
தமிழகத்தில் 100000 போலீசார் குடியரசு தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
ஆண்டு தோறும் குடியரசு தின விழா ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.குறிப்பாக தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், போலீசாரின் அணி வகுப்பு உள்ளிட்டவைகள் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுவுள்ளது.இதற்காக தமிழகம் முழுவதும் பணியில் சுமார் 100000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.