அதிமுகவின் சொத்துமதிப்பு எவ்வளவு?2015-2016இல் ஆய்வறிக்கையில் தகவல்…..
ஐந்தாண்டுகளில் அதிமுகவின் சொத்து மதிப்பு 155விழுக்காடும்,சமாஜ்வாதிக் கட்சியின் சொத்து மதிப்பு 200 விழுக்காடும் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. ஜனநாயகச் சீர்திருத்தச் சங்கம் என்கிற அமைப்பு, அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்த சொத்துக்கள் பொறுப்புக்கள் பட்டியலை ஆராய்ந்து ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
2011ஆம் ஆண்டு 88கோடி ரூபாயாக இருந்த அதிமுகவின் சொத்து மதிப்பு 2016ஆம் ஆண்டு 225கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதே காலக்கட்டத்தில் சமாஜ்வாதிக் கட்சியின் சொத்துமதிப்பு 213கோடி ரூபாயில் இருந்து 635 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதேபோல் சிவசேனா கட்சியின் சொத்து மதிப்பு 21கோடி ரூபாயில் இருந்து 39கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.